Entertainment | பொழுதுபோக்கு
நயன்தாரா கோலமாவு கோகிலா படத்தில் இணைந்த பிரபல நடிகர்.! சர்பிரைஸ்ஸை உடைத்த அனிருத்.!
தற்பொழுது தமிழ் சினிமாவில் உட்ச்சதில் இருக்கும் நடிகை என்றால் அது நயன்தாராதான், இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் வைத்துவிட்டார்கள், சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார் அதனால் தான் இவர் உச்சதில் இருக்கிறார்.
கோலமாவு கோகிலா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, சிவா நடிப்பதும் மட்டும் இன்றி ஒரு சில படத்தில் பாடலும் பாடியுள்ளார் இது அனைவருக்கும் தெரியும், ஆனால் தற்பொழுது ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு பாடலை எழுதியுள்ளார்.
ஆம் நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் சிவா ஒரு பாடலை எழுதியுள்ளார், அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், மேலும் சிவாவின் அடுத்தபடத்திலும் நயனதாரா தான் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
