‘காஷ்மோரா’ படத்திற்கு பிறகு நயன்தாரா கைவசம் ‘டோரா, இமைக்கா நொடிகள், வேலைக்காரன், அறம்,கொலையுதிர் காலம்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘டோரா’ படத்தை தாஸ்ராமசாமி இயக்கியுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இயக்குனர் சற்குணத்தின் ‘சற்குணம் சினிமாஸ்’-வுடன் இணைந்து ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. தற்போது, படத்தை வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெளியிடவுள்ளது ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம். இந்நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ஹாரர் கதைக்களம் என்பதால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனராம். ஆகையால் ஷாக்கான ‘டோரா’ டீம், ‘யு/ஏ’ சான்றிதழுக்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பவுள்ளதாம்.