Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காதுமாவிற்காக ஓகே சொன்ன மக்கள் செல்வன்… நயன் சீக்ரெட்

நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என ஸ்டார் கேஸ்டோடு தொடங்கப்பட்ட இமைக்கா நொடிகள் படம் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப், சைக்கோ கொலையாளியாக மிரட்டியிருக்கும் டிரெய்லர்தான், சோஷியல் மீடியாவின் இன்றைய டிரெண்ட்.

டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அந்த படத்துக்குப் பின்னர் இமைக்கா நொடிகள் படத்தை இயக்குவதாக அறிவித்தார். கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் அறிமுகமாகிறார். மிரட்டும் வில்லனாக அவர் இந்த படத்தில் நடித்திருப்பதகாவும், அவர் கதாபாத்திரம் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதர்வாவின் அக்கா கேரக்டரில் உளவாளியாக நயன் நடித்திருக்கிறார். அவரது கணவராக கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நீண்டநாட்களாக படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்க, ரிலீஸுக்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

நேற்று வெளியான படத்தின் டிரெய்லரில் நயன்தாராவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி இடம்பெறுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் சன்பென்ஸ் டிரெய்லரிலேயே உடைக்கபப்ட்டிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. `ஆர் யூ ஓகே பேபி’ என நானும் ரௌடிதான் டயலாக்கோடு அவரது கதாபாத்திரம் திரையில் அறிமுகமாகிறது, மீசையில்லாமல் இந்த படத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, தனது பிஸியான ஷெட்யூலிலும் நடிகை நயன்தாரா கேட்டுக் கொண்டதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இமைக்கா நொடிகள் படம் அநேகமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top