Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித்தின் வலிமை பட ஹீரோயின் இவரா? வைரலாகுது தயாரிப்பாளருடன் எடுத்துகொண்டு போட்டோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை பட ஹீரோயின் இவரா? வைரலாகுது தயாரிப்பாளருடன் எடுத்துகொண்டு போட்டோ

தல அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை ஹிட் கொடுத்துவிட்டு அடுத்த படத்துக்கு (வலிமை) பூஜையும் போட்டுவிட்டனர். டிசம்பரில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனராக வினோத், இசை யுவன், ஒளிப்பதிவு நீரவ் ஷா என அதே டெக்கினிக்கல் டீம் தான். அஜித் போலீஸ் என்பது மட்டுமே நாம் அறிந்த விஷயம்.

சமீபத்தில் வடிவேலு இப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றனர். இந்நிலையில் போனி கபூர் மற்றும் அவர் மகள் குஷி அவர்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் சந்தித்து உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த போடோஸை விக்கி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

vignesh shivan – nayanthara-boney kapoor – kushi

இது தல 60 பற்றி பேசவா அல்லது போனி கபூர் – விக்னேஷ் சிவன் இயக்கத்திலோ அல்லது நயன்தாராவை வைத்து வேறு படத்தை தயாரிக்கிறாரா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின்பு தான் தெரியும்.

nayanthara-boney kapoor – kushi

எனினும் நயன்தாரா ஜோடி சேரும் பட்சத்தில் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் லிஸ்டில் இப்படமும் இணையும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top