வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தனுஷ் கொடுத்த 24 மணி நேர கெடு.. பயந்து போய் குறுக்கு வழியில் அனுதாபத்தை தேடும் நயன் விக்கி ஜோடி

Dhanush: இப்போது தனுஷ் மீது நயன்தாரா வைத்த குற்றச்சாட்டு தான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் நயன்தாராவுக்கு ஆதரவாக தனுசுடன் இணைந்து நடித்த நடிகைகள் களம் இறங்கி இருப்பதும் பல கேள்விகளை உருவாக்கி இருக்கிறது.

அதே சமயம் சிலர் தனுஷுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தாலும் ஆதரவும் ஒரு பக்கம் குவித்து வருகிறது. மேலும் நயன்தாராவின் பழைய சம்பவங்களை எல்லாம் இப்போது ரசிகர்கள் ரீவைண்ட் செய்து அவரை டேமேஜ் செய்கின்றனர்.

உண்மையில் விக்கி நயன்தாரா இருவரும் மக்கள் முன் ஒரு அனுதாபத்தை தேடிக் கொள்ளலாம் என்ற ரீதியில் தான் மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத அளவுக்கு நெகட்டிவாக மாறும் என அவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இதன் பின்னணி என்று பார்த்தால் நானும் ரவுடிதான் மூன்று வினாடி காட்சிகளை நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்காக தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

நயனுக்கு 24 மணி நேர கெடுவைத்த தனுஷ்

ஏற்கனவே இதற்கு தடையில்லா சான்று கொடுக்க அவர் மறுத்த நிலையில் அதையும் மீறி நயன்தாரா காட்சியை சேர்த்துள்ளனர். அதை நீக்க வேண்டும் என தனுஷ் தரப்பில் இருந்து 24 மணி நேர கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்படி நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் தயாரிப்பாளர் என்ற முறையில் தனுஷிடம் தான் காப்புரிமை இருக்கிறது. அதனால் அவர் சட்டரீதியாக செல்ல முடியும்.

அதனால்தான் விக்கி நயன் ஜோடி அனுதாபத்தில் தேடுவதுபோல் இப்படி ஒரு வேலையை பார்த்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் நானும் ரவுடிதான் படத்தில் தனுஷ்க்கு கிட்டத்தட்ட 10 கோடி வரையில் பட்ஜெட் அதிகமாகி இருக்கிறது.

இதுதான் இந்த பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஒரு விதத்தில் இந்த நஷ்ட ஈடு கூட அதை மனதில் வைத்து தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது. ஆக மொத்தம் நயன்தாரா எதற்கும் சளைத்தவர் கிடையாது என்பதும் தெரிந்த கதை தான்.

- Advertisement -

Trending News