நயன்தாரா  நடிகைகளில் சூப்பர் ஸ்டார் . இவர் நடிக்க  வந்து 14  ஆண்டுகளாகிறது, இன்றளவும் நம்பர் ஒன் இடத்தைத் தக்கவைதிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில்  எந்த நடிகையும் பெறாத பெயர், பணம், புகழ் அனைத்திற்கும் சொந்தக்காரர்.

nayanthara vicknesh sivan
nayanthara vignesh shivan

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நயன்தாரா தன் கைப்பட  கடிதம் ஒன்றினை  எழுதி  தனது ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார்.

“என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். மேலும் இந்த  ஆண்டு உங்கள் கனவுகள் அத்தனையும் நிறைவேறும்.

Nayanthara Letter

உங்கள் அன்பால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஆத்மார்த்தமான  அன்பு இன்னமும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த அன்பால் தான்   வாழ்க்கை அழகானது என்பதை புரியவைத்தது.  எது நடந்தாலும் முழு மனதுடன்  கடின உழைப்பை செய்துவிட்டு  மற்றதை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்பதை உங்களால் தான்  புரிந்துகொண்டேன். .

நீங்கள் என்மீது செலுத்தும் அன்புக்கு நான் செய்யக்கூடிய கைமாறு என்னும் அதிகமாக உழைத்து உங்கள் அனைவருக்கும்  பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படங்களோடு சேர்த்து  ‘அறம்’ போன்ற சமூக அக்கறை நிறைந்த படங்களிலும் நடிப்பதே ஆகும்.

செய்தித்தாள், புத்தகம் , டிவி , சமூக வலைதளங்களுக்கும், மற்றும் சினிமா அன்பர்கள், ரெவியூ செய்பவர்கள், சினிமாவை அலசுபவர்கள் என அறம் படம் மக்களிடம் ரீச் ஆக செய்த அனைவருக்கும்  நன்றிகள்.

இந்த  ஆண்டு பாசிட்டிவ் விஷயங்கள் நிறைய நடந்துள்ளது .  இதை நீங்கள்தான் சாத்தியமாக்கினீர்கள்.  மறுபடி இது போன்ற அன்பு மற்றும் நல்ல விஷயங்களை செய்தமைக்கு உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

nayanthara

உங்கள அனைவரையும் நான் நேசிக்கிறேன். உங்களால் தான் நான் இந்த நிலையில் உள்ளேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன். உங்கள் இதயங்களில் எனக்கு இடம்  அளித்தமைக்கு  நன்றி.

2018 உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும். இறைவன் அருள் பாளிக்கட்டும்,- நயன்தாரா ” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.