கேரளா சேலை, தலை நிறைய மல்லிகைப்பூ.. மெல்லிய இடையை காட்டி சுண்டியிழுக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள்

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா(nayanthara). கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் சரி, கதையின் நாயகியை மையப்படுத்தி உருவாகும் படமாக இருந்தாலும் சரி. இரண்டு வகையான திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் குவித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் மூலம் நயன்தாரா அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தி விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே நாலு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

nayanthara-cinemapettai-01
nayanthara-cinemapettai-01

பாலிவுட் நடிகைகளுக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர்.

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai

நயன்தாராவுக்கு வயதான போது எதற்காக இப்படி பணத்தை கொட்டி கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு அடிக்கடி தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகிறார். இப்படி அழகா இருந்தா எப்படி விட்டுக் கொடுக்க மனசு வரும்.

Advertisement Amazon Prime Banner