Tamil Cinema News | சினிமா செய்திகள்
திடீரென பிரபல நடிகருடன் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா.. 12 வருஷத்துக்கு பிறகு ஒன்று சேர்றாங்களாம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாரா மலையாள சினிமாவில் மட்டும் மிகக் குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுப்பதாக பிரச்சனைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் 12 வருடத்துக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகர் ஒருவருடன் நிழல் என்ற மலையாள படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில்கூட நிழல் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
குஞ்சகோ போபன் என்ற நடிகருடன் 12 வருடத்துக்கு பிறகு நயன்தாரா இணைவதால் தற்போது அவருடன் நிறைய நேரம் செலவழித்து வருகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் அவர் நயன்தாராவின் நீண்டகால நண்பர் என்பதால் அவரது வீட்டுக்கு சென்றுள்ள நயன்தாரா புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

nayanthara-cinemapettai
