சிவகார்த்திகேயன் முதல்முறையாக எழுதி இருக்கும் கல்யாண வயசு பாடல் காப்பி என இணையத்தளங்களில் சலசலப்பு நிலவி வருகிறது.

ko ko

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக அறிமுகமாகி இன்று கோலிவுட்டின் முக்கிய புள்ளியாக இருக்கிறார். தனது படங்களில் பாடல்களும் பாடி ஹிட் அடித்து இருக்கிறார். இவரும் இசையமைப்பாளர் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த சேதி தான். சிவாவின் பல படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பு செய்து இருந்தார். இதனால் அவரின் பாடல்கள் சாதாரணமாகவே பலர் ரசிக்கும்படியாக அமைந்து இருக்கும். இதை தொடர்ந்து, அனிருத் இசையமைத்து வரும் படம் கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி வேடம் ஏற்று இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  ட்விட்டர்வாசிகளால் கடுப்பில் இருக்கும் மக்கள் செல்வன்...

இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டாருக்கு ஜோடி கிடையாது. ஆனால், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபு நயனை ஒரு தலையாக காதலிப்பார். அவரை நினைத்து பாடும் ஒரு பாடலும் படத்தில் இடம்பெற்று இருக்கிறது. கல்யாண வயசு எனப் தொடங்கும் இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். இத்தகவலே சிவா ரசிகர்களுக்கு பாடல் மீதான ஆவலை அதிகரிக்க செய்தது. தொடர்ந்து, சிங்கிளும், வீடியோவும் இணையத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே பாடலுக்கு 5 மில்லியன் வியூஸ் அதிகரித்தது. பாடலாசிரியராக சிவா கலக்கி இருப்பதாக அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருந்தன.

அதிகம் படித்தவை:  மேடையில் வைத்து நடிகையிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்
kolamaavu

இந்நிலையில், வைரலாகி வரும் இப்பாடல் ஒரிஜினல் இல்லை. காப்பி என இணையத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆங்கிலத்தில் வெளியான ப்லீங் மீ என்ற பாடல் தான் கல்யாண வயசாக மாறி இருப்பதாக ஒரிஜினல் வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. என்ன ஜீ! இதெல்லாம் கவனிக்குறது இல்லையா!