நடிகை நயன்தார தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறார் அதனால் அவருக்கு தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்தார்கள் தமிழ் ரசிகர்கள்.

இந்த நிலையில் இவர் கோலமாவு கோகிலா படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படமும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக அமைந்துள்ளது, மேலும் கோலமாவு கோகிலா படத்தை பாராட்டி விக்னேஷ் சிவன் ட்விட் செய்துள்ளார் தனது ட்விட்டர் பக்கதில்.

அவர் பாராட்டியது நல்லதுதான் அதில் ஒன்றும் இல்லை ஆனால் அவரை பாராட்ட வெளியிட்ட புகைப்படம் தான் நயன்தார ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, ஆம் நடிகை நயன்தாரா அழுவது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதனை பார்த்த ரசிகர்கள், “என்னடா தலைவி கண்ணுல கண்ணீர் வருது.?” எனவும், “என்னப்பா புள்ள அழுகுது.. கண்ணும் கருத்துமா பாத்துக்கச் சொல்லி அனுப்புனா இப்டியா பன்றது???” எனவும் கோபமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.