நயன்தாராவின் `கோலமாவு கோகிலா’ டைட்டிலில் உள்ள கோலமாவுக்கு என்ன பொருள் தெரியுமா?

ko ko

கோலிவுட் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், அவ்வப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ரோலை செலெக்ட் பண்ணி நடிக்கத் தவறுவதில்லை. அப்படி அவர் தேர்ந்தெடுத்த மாயா மற்றும் அறம் படங்கள் வேற லெவல் ஹிட்டடித்தன. அதுபோல், இந்த படங்கள் மூலம் அறிமுக இயக்குநர்களுக்கும் நயன்தாரா வாய்ப்புக் கொடுத்தார்.

அந்தவகையில், நயன் அடுத்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கும் படம் கோலமாவு கோகிலா. முழுக்க முழுக்க ஹீரோயினை மையமாகவே வைத்து நகரும் கதையம்சம் கொண்ட இந்த படத்ட்தை நெல்சன் திலீப்குமார் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். படத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனிருத் இசையில் எதுவரையோ, எதுவரையோ என்ற தலைப்பில் வெளியான சிங்கிள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதுவும் குறிப்பாக பாடலின் ஊடே வரும் இயக்குநர் கௌதம் மேனனின் கவர்ந்திருக்கும் குரல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்த பாடலுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஹீரோயினுக்கு உத்வேகம் ஊட்டும் வகையில் அமைந்த அந்த வரிகள், பெண்களுக்கான உந்துதலாகவே பார்க்கப்படுகின்றன.

விறுவிறுப்பாக நடந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. நயன்தாரா டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தராவுக்கு ஜோடி கிடையாது. ஆனால், அவரது தெருவில் வசிக்கும் யோகிபாபு, அவரை ஒருதலையாகக் காதலிக்கும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக நயனிடம், யோகிபாபு புரபோஸ் பண்ணுவது போன்ற எனக்கு இப்போ கல்யாண வயசு வந்திடுச்சு பாடலின் புரோமோவை அனிருத் வெளியிட்டு டெம்போ ஏற்றினார். குறிப்பாக அந்த பாடலை எழுதியது சிவகார்த்திகேயன் என்ற தகவலையும் அனிருத் வெளியிட்டார். இதனால், அந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

kolamaavu

படத்தின் டைட்டில் வெளியானபோது கோலமாவு என்ற வார்த்தை ஏன் இடம்பெற்றது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். அந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. படத்தில் நயனின் குடும்பம் தீடீரென ஒரு சிக்கலில் சிக்குகிறது. அந்த சிக்கலில் இருந்து விடுபட பெரிய அளவில் பணம் தேவைப்படவே. குடும்பத்தைக் காக்கும் பொருட்டு நயன் போதைபொருள் விற்கத் தொடங்குகிறார். சாதாரண குடும்பத்துப் பெண்ணான நயன் போதைபொருள் கடத்துவதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என்பதால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதில், கோலமாவு என்பது அந்த போதைபொருளைக் குறிக்கும். இதனாலேயே படத்துக்கு கோலமாவு கோகிலா என பெயரிடப்பட்டதாக படக்குழுவினர் கிசுகிசுக்கிறார்கள்.