fbpx
Connect with us

Cinemapettai

பிரபுதேவாவிற்கு ஜோடியாகும் நயன்தாரா

prabhudeva nayanthara

News | செய்திகள்

பிரபுதேவாவிற்கு ஜோடியாகும் நயன்தாரா

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்த நிலையில், தற்போது தனுஷிற்கு பதிலாக அப்படத்தில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே என்ற கன்னட நடிகை ஒப்பந்தமாகி இருந்த நிலையில், கன்னடர்கள் எதிர்ப்பால் இப்படத்தில் இருந்து தான் விலகுவதாக சம்யுக்தா அறிவித்திருந்தார்.

இதையடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு சார்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லை.

நடிகர் பிரபுதேவா ‘யங் மங் சங்’, ‘கொலையுதிர்காலம்’ படத்தின் ஹிந்தி பதிப்பு உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருவதோடு, விஷால் – கார்த்தி இணைந்து நடிக்க உள்ள ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்தையும் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top