vignesh shivan nayanthara keerthy suresh

விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தனது காதலர் விக்னேஷ் சிவனை பெரிய இயக்குனர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார் நயன்தாரா.

இதில் முதல்கட்டமாக அவர் பெரிய ஹீரோவின் படத்தை இயக்க நயன்தாரா உதவி செய்துள்ளார். அஜீத்தை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து சூர்யாவை அணுகி விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தார் நயன்தாரா.

விக்னேஷ் சிவன், சூர்யா இணையும் படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என பெயரிட்டுள்ளனர். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் வருகிறாராம்.

சிறப்புத் தோற்றம் என்றாலும் நயனுக்கு முக்கிய கதாபாத்திரமாம். இதை கேள்விப்பட்ட கீர்த்தி டென்ஷன் ஆகி சண்டை போட்டாராம். பிறகு சூர்யாதான் சமாதானபடுத்தினார் என்றார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.