சிவகார்த்திகேயன்

வளர்ந்து வரும் காமெடியன் சிவகார்த்திகேயன் என்ற நிலையில் இருந்து முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன் என்ற நிலையை அடைந்து விட்டார். இந்த அசுர வளர்ச்சிக்கு 24 AM ஸ்டுடியோஸ், ஆர். டி ராஜாவின் பங்களிப்பும் முக்கிய காரணம்.

வேலைக்காரன் பட வெற்றிக்கு பிறகு தற்பொழுது சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ரஹ்மான் இசையில் ரவிக்குமாரின் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் சைன்டிஸ்ட் வேடத்தில் நடிக்கிறார்.

Siva Karthikeyan- AR Rahman – – Ravikumar

SK 13

இந்நிலையில் சிறிய இடைவெளிக்கு பின் வெளி பானரான ஸ்டூடியோ க்ரீனுடன் ஒரு படம் ஒப்பந்தமானார். இந்த படத்தை சிவா மனசுல சக்தி பட புகழ் இயக்குனர் ராஜேஷ் தான் இயக்குகிறார். பெயர் வைக்கப்படாத இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் நடந்தது. அப்பொழுதே ஹீரோயின் நயன்தாரா என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

Nayanthara

மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயத்தரவின் கெட் – அப் போட்டோவும் வெளியாகியுள்ளது.