செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நயன்தாராக்கு பதிலா ராக்காயி படத்தில் நடிக்க இருந்த ஹீரோயின்.. ரஜினி ஜோடியவே கழட்டிவிட்ட பரிதாபம்

கடந்த ஒரு வருடமாக சினிமாவிற்கு சிறிது பிரேக் கொடுத்திருந்த நயன்தாரா இப்பொழுது மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். குழந்தைகளை வளர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு ஷூட்டிங் செல்லாமல் சென்னையில் மட்டுமே ஷூட்டிங் நடத்துமாறு அறிவுறுத்தி வந்தார். 40 வயதாகியும் ஹீரோயினாக கமிட்டாகி வருகிறார்.

தற்போது இவர் பிறந்தநாளையொட்டி ராக்காயி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி இருந்தது. படத்தில் நயன்தாராவிற்கு ஆக்சன் ஹீரோயின் கதாபாத்திரம். அவ்வளவு அழகாக பொருந்தி இருக்கிறது. குழந்தைக்கும், தாய்க்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும், சமூகத்தை எதிர்த்து நயன்தாரா செய்யும் போராட்டமும் தான் கதைக்களம்.

தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்கள் நயன்தாராவின் லைன் அப்பில் இருக்கிறது. இப்பொழுது ராக்காயி படம் 50 சதவீதம் முடிந்து விட்டது. இந்த படத்தில் முதலில் கமிட்டானது நயன்தாரா இல்லையாம். சமீபத்தில் பீக்கில் இருக்கும் ஹீரோயினை தேர்ந்தெடுத்துள்ளனர் ஆனால் அவர் வேண்டாம் என ஒதுக்கியதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

அருண் மாதேஸ்வரனின் அசிஸ்டன்ட் இயக்குனர் செந்தில் நல்லசாமி ராக்காயி படத்தை இயக்குகிறார். இதுதான் ஒரு இயக்குனராக அவர் அறிமுகமாகும் முதல் படம். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு நயன்தாராக்கு பதிலாக நடிக்க இருந்தவர் மலையாள சேச்சி மஞ்சு வாரியர். அவரும் இந்த படத்திற்கு கால் சீட் கொடுத்து விட்டார்.

சட்டென்று சுதாரித்துக் கொண்ட படக்குழு மஞ்சுவாரியரை வைத்து இந்த படத்தை பிசினஸ் செய்வது மிகவும் கடினம். இது தமிழ் படம் தான் ஆனால் இந்த படம் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்று ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. நயன்தாரா இந்த படத்திற்கு வந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என மஞ்சு வாரியர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் மஞ்சு வாரிய ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து லைம் லைட்டில் தான் இருந்து வருகிறார்

- Advertisement -

Trending News