மீண்டும் வெறி கொண்டு களத்தில் இறங்கும் நயன்தாரா.. செம ஸ்டைலிஷ் ஆன லேட்டஸ்ட் புகைப்படம்

கடந்த ஜூன் மாதம் நயன்தாரா நீண்ட நாட்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைக்கு தாயானதாகவும் திருமணமான நான்கே மாதத்தில் அறிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

அதன் பின் குழந்தைகளுடன் அதிக நேரத்தில் செலவிட விரும்பிய நயன்தாரா ஒருவேளை சினிமாவிற்கு முழுக்கு போடுவாரா என்றும் அவருடைய ரசிகர்கள் பயந்தனர். ஆனால் அதற்கு மாறாக இப்போது நயன் செம ஸ்டைலிஷ் ஆன புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் திருமணத்திற்கு பிறகு ஃபுல் ஃபார்ம் உடன் நடிக்க கிளம்பிவிட்டார்.

Also Read: ஒரு டசன் படம் கையில் இருந்தும் கேஜிஎப் கூட்டணியில் இணையும் நயன்தாரா.. பணத்தாசையால் தவிக்கும் தயாரிப்பாளர்கள்

இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. அதிலும் நயன் அணிந்திருக்கும் பேண்ட் கிழிந்திருப்பதை வைத்து சிலர் கலாய்த்தம் வருகின்றனர் தற்போது நயன்தாரா அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாக்கி வரும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு நயன்தாரா மாதவனுடன் முதல் முதலாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தான் சித்தார்த் மற்றும் மாதவன் இருவரும் ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு மறுபடியும் இணைகின்றனர். மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் கனெக்ட் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

செம ஸ்டைலிஷ் ஆன நயன்

nayan-new-look-cinemapettai
nayan-new-look-cinemapettai

Also Read: தற்பெருமையில் தலைகால் புரியாமல் ஆடும் நயன்தாராவின் மாமியார்.. எல்லாம் காசு படுத்துற பாடு!

நயன்தாராவுக்கு அடுத்தடுத்து கோல்டு, பாட்டு, ஆட்டோ ஜானி, நயன்தாரா 75, ஏகே 62 என அடுத்தடுத்து டஜன் கணக்கில் படங்களை வைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது இவர் கேஜிஎஃப் தயாரிப்பாளர் உடன் பணியாற்றவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படி அடுக்கடுக்காக படத்தை ஓகே செய்து வைத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி நயன்தாரா விட்டதை பிடிக்க 2023 ஆம் ஆண்டில் தட்டித் தூக்க வேண்டும் என, செம ஸ்டைலிஷ் லுக் உடன் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாக காத்திருக்கிறார். இதனால் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடர வேண்டும் என்பதற்காக வெறிகொண்டு களத்தில் குதித்திருக்கிறார் என்பதை இந்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது.

மீண்டும் ஃபுல் ஃபார்ம்-க்கு வந்த லேடி சூப்பர் ஸ்டார்

nayan-cinemapettai
nayan-cinemapettai

Also Read: ஹீரோக்களின் சப்போர்ட் இல்லாமல் வசூலை வாரிக் குவிக்கும் 7 ஹீரோயின்கள்