Tamil Cinema News | சினிமா செய்திகள்
பழைய காதலரின் பெயரை மறைக்க நயன்தாரா பண்ணிய ஐடியா.. என்ன ஒரு புத்திசாலிதனம்.!
தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சைகளில் சிக்கிய நாயகி என்றால் அது நயன்தாரா தான். நடிகர்களில் எப்படி சிம்புவோ அதேபோல் நடிகைகளில் இவர். இந்த இருவரின் காதல் தான் இருவரின் பிரச்சனைக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
வல்லவன் படப்பிடிப்பின்போது சிம்புவுக்கு நயன்தாரா மீது காதல் வந்தது. அதேபோல் இருவரும் படத்தில் நடிக்கும் போது மிகவும் நெருக்கமான காட்சிகளில் படுபயங்கரமாக நடித்து இளைஞர்களின் சூட்டை கிளப்பியது அனைவரும் அறிந்த கதை.
அதன்பிறகு இருவரும் பிரிந்து விட்டனர் என செய்தி வந்தது. சரி என யோசித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென நயன்தாராவுக்கு பிரபுதேவாவின் மீது காதல் வந்தது. இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் போது நயன்தாரா, பிரபுதேவாவின் பெயரை பிரபு என தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். பிரபுதேவாவும் அவரின் பங்குக்கு தன்னுடைய மனைவியை விரட்டிவிட்டு நயன்தாராவே கதியென இருந்ததும் தெரிந்த கதை தான்.
நயன்தாரா மதம் மாறியதெல்லாம் காதலின் உச்சம். யார் கண்பட்டதோ இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு இறுதியாக தற்போது விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார் நயன்தாரா. இந்த முறை சாமி சத்தியமாக இவரை கல்யாணம் செய்து கொள்வேன் என உறுதி எடுத்து, ஊர் ஊராக சுற்றி வருகின்றனர்.
ஆதவன் படப்பிடிப்பின்போது மனோபாலா அவர்கள் பிரபுதேவாவின் பெயரை எப்படி நடிக்கும்போதும் மறைக்க போகிறீர்கள் எனக் கேட்டதற்கு, உடனடியாக கை நிறைய வளையல்கள் போட்டு மறைத்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். என்ன ஒரு புத்திசாலித்தனம்.
இதுக்கு ஒரு எண்ட் இல்லையா? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
