Tamil Cinema News | சினிமா செய்திகள்
பயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட நயன்தாராவின் நெற்றிக்கண் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
தன் காதலர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் பாணரில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். மேலும் 1981ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.

nayanthara vignesh shivan
“அவள்” பட இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
நேற்று ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

nayanthara in netrikkan
2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ (blind ) பட ரீமேக் ‘நெற்றிக்கண்’ எனவும் கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர். மேலும் கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
