செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கேரளாவிலும் கைவரிசை காட்டிய நயன் விக்கி.. மொத்த கஜானாவையும் காலி செய்யும் லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாரா, தனுஷிடம் மட்டும் பிரச்சனை செய்யவில்லையாம் நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் செய்த காரியத்தால் கேரளாவிலும் அவருக்கு இப்பொழுது பிரச்சனை வந்துள்ளது. சினிமாவையும் தாண்டி நயன்தாரா ரியல் எஸ்டேட், ஷேர் மார்க்கெட், அழகு சாதன பொருட்கள் என பிசினஸ் செய்து வருகிறார்.

ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்பு 9 ஸ்கின்ஸ் என்ற அழகு சாதன நிறுவனத்தை தொடங்கினார். முகத்தில் பூசக்கூடிய அழகு சாதன பொருட்கள், நாப்கின் போன்றவற்றை விற்கும் நிறுவனம் இது. இப்பொழுது இந்த நிறுவனத்திற்கு தடை போட்டு கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிறுவனத்தின் பொருட்களை ப்ரோமோஷன் செய்வதற்காக பாடல் ஒன்றை பிரபலமான ஆல்பத்தில் இருந்து பயன்படுத்தி விட்டார்கள். இப்பொழுது எங்களிடம் அனுமதி கேட்கவில்லை என அந்த ஆல்பம் சம்பந்தப்பட்டவர்கள் நயன்தாராவின் மீது கேரளாவில் கேஸ் போட்டுள்ளனர். இதுதான் நயன்தாராவுக்கு இப்பொழுது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த ஆல்பத்தை பகத் பாசில் நடித்த ஆவேசம் படத்தில் கூட பயன்படுத்தி இருந்தார்கள். கிட்டத்தட்ட மில்லியன் கணக்கில் இந்த ஆல்பத்திற்கு வியூஸ் கிடைத்துள்ளது. அதனால் அந்த ஆல்பத்தில் வரும் பாடலை நயன்தாராவின் நிறுவனம் அழகு சாதன பொருட்களுக்கு பேக்ரவுண்ட் இசைக்கு பயன்படுத்தி விட்டார்கள்.

கரிங்காலி எனப்படும் அந்த ஆல்பம் சூப்பர் ஹிட் அடித்தது. அதுவும் ஆவேசம் படத்தில் அந்த பாடல் இடம் பெற்ற பிறகு வேற லெவலில் அதற்கு மக்களிடம் ஆதரவு கிடைத்தது. முறையான அனுமதி வாங்கிய பின்னரே ஆவேசம் படத்தில் அந்த பாடல் இடம் பெற்றது. ஆனால் நயன்தாரா ஆல்பம் சம்பந்தப்பட்ட குழுவிடம் எந்த அனுமதியும் வாங்கவில்லை. அவர் கேஸ் போட்டதால் நஷ்ட ஈடு கொடுக்க நேரிடும். ஏற்கனவே தனுஷும் நஷ்ட ஈடு கேட்டு உள்ளார்.

- Advertisement -

Trending News