Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருங்கால புருஷனுக்கு பிரம்மாண்ட பரிசு.. கோலிவுட்டை அண்ணாந்து பார்க்க வைக்கும் நயன்தாரா
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ள தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பல வருடங்கள் எதிர்பார்த்த இந்த திருமணம் தற்போது நடைபெற உள்ளது இதற்காக பிரம்மாண்ட பரிசை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு கொடுக்க உள்ளாராம்.
இதற்காக 7.5 கோடி பட்ஜெட்டில் ஒரு காரை சமீபத்தில் விக்னேஷ் சிவன் டெஸ்ட் டிரைவ் செய்தார். இவரை விட அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் கூட இந்த காரை வாங்க முடியாத நிலையில் விக்னேஷ் சிவன் எப்படி இந்த காரை சொந்தமாக வாங்கினார் என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அதிலும் சமீபத்தில் இவர் இயக்கி, தயாரித்த காத்துவாக்குல 2 காதல் படம் தோல்வியையே சந்தித்தது.
ஆனால் விக்னேஷ் சிவனும், அவருடைய காதலி நயன்தாராவும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்கள்.மேலும் நிறைய தொழிலிலும் முதலீடு செய்து வருகிறார்கள். இதுதவிர நயன்தாரா லிப் பாம் கம்பெனியும் வைத்துள்ளார்.
மேலும் நயன்தாரா பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் விக்னேஷ் அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை.
இந்நிலையில் ஃபெராரி காரை விக்னேஷ் சிவன் வாங்கவில்லை, திருமண பரிசாக நயன்தாரா தான் கொடுத்து உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து மோதிரம் மாற்றிக் கொண்ட விஷயத்தை ஒரு தொலைக்காட்சியில் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது படு பிசியாக இருக்கும் நயன்தாரா தனது சம்பாத்தியத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு இந்த காரை பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இவர்களது திருமணம் இந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் திருப்பதி கோயிலில் தான் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
