Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

காதல் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா.. களைக்கட்டிய விக்கியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து அவர்களின் தேன்நிலவு உள்ளிட்ட பல போட்டோக்கள் சோசியல் மீடியாவையே கலக்கி வருகிறது.

நாடு நாடாக சுற்றி வரும் இந்த காதல் ஜோடி சமீபத்தில் தான் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

Also read:திருமணத்திற்கு பிறகு மாஸ்டர் பிளான் போட்ட நயன்.. தூது புறாவாக செயல்பட்ட விக்னேஷ் சிவன்

அதாவது அவர் விக்னேஷ் சிவன் அம்மா மற்றும் தங்கையை துபாய்க்கு சர்ப்ரைஸ் ஆக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் தன் கணவரின் பிறந்தநாளை குடும்பத்தினர் முன்னிலையில் அவர் கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்.

நெற்றியோடு நெற்றி முட்டியபடி இருக்கும் விக்கி, நயன்

 

vigneshsivan-nayanthara

vigneshsivan-nayanthara

இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத விக்னேஷ் சிவன் அந்த மகிழ்ச்சியை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் தங்கம் எனக்கு கொடுத்த சர்ப்ரைஸ் என்று கூறி சில போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார்.

Also read:நயன்தாராவை பார்த்து வாழ்க்கையை தொலைத்த மாணவி.. திட்டம் போட்டு ஏமாற்றிய பிரபலம்

அதில் காதல் ஜோடி இருவரும் நெற்றியோடு நெற்றி முட்டியபடி போஸ் கொடுத்துள்ளனர். அந்த போட்டோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் விக்கி தன் தாய் மற்றும் தங்கையுடன் இருக்கும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

தாய் மற்றும் தங்கையுடன் விக்கி

vignesh-sivan

vignesh-sivan

இந்த பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்கள் தான் தற்போது ட்ரெண்ட்டாகிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவனுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Also read:நயன்தாரா ஸ்டைலில் தனிவிமானம், தனி தீவு.. தேனிலவுக்கு புறப்பட்ட மகாலட்சுமி-ரவீந்தர்

Continue Reading
To Top