செகண்ட் இன்னிங்சில் நயன்தாரா சினிமாவில் என்ட்ரி ஆனபோது, பிரபுதேவாவை விட்டு பிரிந்து வந்ததால் படப்பிடிப்பு தளங்களில் அமைதியே உருவாக அமர்ந்திருந்தார். மதிய இடைவேளை நேரங்களில் நடிகர் நடிகைகள் ஜாலியாகஅமர்ந்து அரட்டையடிக்க இவர் மட்டும் கேரவனுக்குள்ளேயே அமர்ந்து தனிமை விரும்பியாக இருந்து வந்தார். ஆனால் நாளடைவில் நயன்தாராவிடத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. கூடவே தனி ஒருவன், நானும் ரவுடிதான், மாயா படங்களின் அடுத்தடுத்த வெற்றி நயன்தாராவை உற்சாக மனநிலைக்கு மாற்றிவிட்டன.

அதனால், திடீரென அவரும் அரட்டை நடிகையாக உருவெடுத்தார். தன்னுடன் நடிப்பவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கினார். அதோடு, தனது வேலை முடிந்ததும் கேமரா முன்பு நிற்பதையே தவிர்த்து வந்த நயன்தாரா, இப்போது அஜித் பாணியில் கேமரா அருகில் ஒரு சேர் போட்டு மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கைப்பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்கிறார். நயன்தாராவின் இந்த மாற்றங்கள் சினிமா வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஆக, அஜித் பாணியில், தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பஙகேற்பதில்லை என்பதை கடைபிடித்து வரும் நயன்தாரா, இப்போது அவரை மாதிரியே மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்க்கும் இன்னொரு அஜித் கொள்கை யையும் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.