Connect with us
Cinemapettai

Cinemapettai

viswasam-vaney-vaney-song

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் படத்திற்காக நயன் செய்த மிகப்பெரிய காரியம். அட! அம்மா இப்படியா?

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா விட்டுக்கொடுத்திருக்கும் விஷயங்கள் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது இருக்கும் நாயகிகளிலேயே முதல்முறையாக தனி அடையாளத்தை பெற்று இருக்கும் ஒரே நாயகி. ரசிகர்களின் கனவுக்கன்னி என்றாலும் லேடி சூப்பர்ஸ்டார் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர்களை கொண்டு இருப்பவர். ஒவ்வொரு படத்திலும் அவருக்கான கதாபாத்திரம் செம வலுவாக இடம் பெற்று இருக்கும். சாது முதல் அதிரடி வரை வெளுத்து வாங்குபவர். அவர் தனிப்பட்ட வாழ்வில் சர்ச்சைகள் ஏராளம் இருந்தாலும், அதை தனது நடிப்புத்துறைக்குள் கொண்டு வராமல் பார்த்து கொள்வார். பாக்ஸ் ஆபிஸ் நடிகர் என்ற அடைமொழியை மாற்றி பாக்ஸ் ஆபிஸ் குயினானவர் நயன்தாரா.

கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம், இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து நாயகி முக்கியத்துவம் உள்ள கதைகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். அதேப்போல, தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ஒரு காதல், தெலுங்கில் சை ரா சிம்ஹா ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்‌ஷன் ட்ராமா, த்ரிஷ்னா உள்ளிட்ட படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்திலும் நடித்து வருகிறார். தல படம் என்றாலே கண்டிப்பாக அதிகம் போகஸ் செய்யப்படுபவர் அவர் தான். ஆனால், லேடி சூப்பர்ஸ்டார் எப்படி இந்த படத்தை ஓகே சொன்னார் என கோலிவுட் வட்டாரத்தில் பெரும் கிசுகிசுக்கள் நிலவியது. நயன் இப்படத்தின் கதையைக் கூட கேட்கவில்லையாம். தல படம் என்றதும் ஓகே சொல்லி விட்டார். தொடர்ந்து, சம்பளம் குறித்துக்கூட இயக்குனர் சிவாவிடம் எந்த கேள்வியையும் கேட்கவில்லை. கால்ஷூட்டிலும் பெரிய அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொடுத்து இருப்பதாக தெரிகிறது. அஜித்தான் நயனின் பிரியமான நடிகர் என்பது எல்லாருக்குமே தெரியும். இருந்தும் இந்த அளவு அவருக்காக விட்டு கொடுப்பவரா நயன் என எல்லாருமே ஆச்சரியமாக பேசி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top