அண்மையில் பிலிம்பேர் விருது விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் சிறந்த திரைப்படம் காக்கா முட்டை படத்திற்கு கிடைத்தது, அதோடு நானும் ரவுடித்தான் படத்திற்காக நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.விழாவில் காக்கா முட்டை படத்திற்கு விருது பெற மேடையேறிய தனுஷ், காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யாவை பாராட்டி பேசியுள்ளார்.

அதிகம் படித்தவை:  மீண்டும் பேய் படத்தை கையில் எடுக்கும் நயன்தாரா.? வேலைக்கு ஆகுமா.!

ஆனால் அவர் தயாரித்த நானும் ரவுடித்தான் படத்திற்காக நயன்தாராவிற்கு விருது கிடைத்தற்கு எந்த பாராட்டையும் கூறவில்லை.இவரை தொடர்ந்து மேடையேறிய நயன்தாரா, தனுஷ் என்னை பற்றி எதுவும் பேசவில்லை. ஒருவேளை அவருக்கு என் நடிப்பு பிடிக்கவில்லையோ என்னவோ, ஐயாம் ஸாரி தனுஷ் என வருத்தத்துடன் கூறினார்.

அதிகம் படித்தவை:  தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா? என்ன படமாக இருக்கும்..!

இந்த விருதை விக்னேஷ் சிவனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்