Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. சரியா போச்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு மிகவும் நெருக்கமான தொடர்பில் இருக்கும் பிக்பாஸ் பிரபலத்தைப் பற்றி தான் இன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மலையாள வரவாக வந்து தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த நாயகியானார் நயன்தாரா. இவரது சொந்த வாழ்க்கையில் காதல் பஞ்சாயத்து பல இருந்தாலும் திரை வாழ்க்கையை பொறுத்தவரை அம்மணி கெத்து தான். டாப் ஆங்கிளில் நயன்தாரா வெளியிட்ட புகைப்படம் வைரல் ஆனது.

லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் கிட்டத்தட்ட ஆறு கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மாஸ் படங்களில் மட்டும் இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்தடுத்து நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் வேற லெவலில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் நிழல் படத்தில் நயன்தாரா நடிச்சார். நிழல் படத்தின் விமர்சனம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளின் போது அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்யுக்தா மிக நெருக்கமாக போட்டோ எடுத்துக் கொண்டது கோலிவுட் வட்டாரங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் என்ன தொடர்பு என தேடி வருகிறார்கள்.

மாடல் அழகியான சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறினார். இதில் கலந்து கொண்ட போது சக மாடல் துறையைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு அதிகமாக சப்போர்ட் செய்த காரணமாக இவர் ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

nayanthara-biggboss-samyuktha

nayanthara-biggboss-samyuktha

Continue Reading
To Top