விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்

Vignesh Shivan : நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ள நிலையில் அவர்களது புகைப்படங்களையும் வலைதளங்களில் விக்னேஷ் சிவன் அடிக்கடி பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஒருபுறம் நடிப்பு, பிசினஸ் என்று நயன்தாரா பிசியாக இருக்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும் இப்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

விக்கியின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் நடந்த சைமா விருதுக்காக துபாய் சென்றிருந்தனர். இப்போது இருவரும் துபாயில் தான் மையம் கொண்டு உள்ள நிலையில் அங்கு விக்னேஷ் சிவனின் 39 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா.

முத்தத்தை காதல் பரிசாக கொடுத்த நயன்தாரா

அதுவும் நள்ளிரவில் ஹோட்டல் ஒன்றில் தனது காதல் கணவருக்கு முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தை நயன்தாரா சொல்லி உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நயன்தாரா பதிவிட்டுள்ளார்.

காதல் மனைவிக்கு முத்தமிட்ட விக்னேஷ் சிவன்

இப்போது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். மேலும் இவரின் கையை விட்டு விடாமுயற்சி படம் போனாலும் எல்ஐசி படம் மிகப்பெரிய வெற்றி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசினஸில் பட்டையை கிளப்பும் நயன்தாரா

- Advertisement -spot_img

Trending News