fbpx
Connect with us

பிறந்தநாள் அன்று தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா… ரசிகர்கள் கொண்டாட்டம்!

nayanthara-post

News | செய்திகள்

பிறந்தநாள் அன்று தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னை சினிமாவிற்கு என்றே அர்ப்பணித்துக் கொண்டவர் என்று கூறலாம். இவர் 2005ஆம் ஆண்டு ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். பின்பு அஜீத்துடன் பில்லா, யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன், நானும் ரவுடிதான், ராஜா ராணி,அரண் மற்றும் இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நீங்காத இடம்பிடித்தார்.

nayathara

இவர் இப்பொழுது இயக்குனரும் நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் எப்ப வென்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

nayan-2019

nayan-2019

 

பிறந்தநாள் அன்று ஜனவரி 2019இல் வெளி வர இருக்கும் நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் பெரும் திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிறந்தநாள் காணும் நயன்தாராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்படிக்கு சினிமாபேட்டை ரசிகர்கள்.

nayan-bday

nayan-bday

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top