nayanthara-2ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர்-1 நடிகையாக உயர்ந்தவர் நயன்தாரா .

“நானும் ரவுடிதான்” படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை தற்போது நயன்தாரா காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிறைய செய்திகள் வந்துள்ளது, வந்து கொண்டும் இருக்கிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.

தற்போது நயன்தாரா கோயம்பேடு அருகே பிளாட் ஒன்றை வாங்கி அங்கு குடியேறி உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நயன்தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என்று கூறி மர்ம நபர்கள் சிலர் நயன்தாராவின் வீட்டிற்குள் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும், தனியாக நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் படித்தவை:  எனக்கு ஓப்பனிங் ஸாங் வேணும்! நயன்தாரா பிடிவாதம்?

நயன்தாராவை தாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. பழைய பகை அல்லது பழைய காதல் பகை காரணமாக யாரேனும் தாக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக நயன்தாரா, போலீசிலும் புகார் அளிக்கவில்லையாம்.

அதிகம் படித்தவை:  கஷ்மோரா படத்தில் படை வீரனாக நடிக்கும் கார்த்தி

நயன்தாரா தாக்கப்பட்டார் என்ற இந்த செய்தி இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.