Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த படத்துல நடிச்சத நினைச்சா வெட்கமா இருக்கு.. அஜித் பட இயக்குனரை கண்டாலே கடுப்பாகும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா அந்த ஒரு குறிப்பிட்ட படத்தில் மட்டும் நடித்ததை நினைத்து இப்போதும் வெக்கப்படுவதாக தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி கடுப்பாகிறாராம்.

இயக்குனர்கள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்து நடிக்கும் நடிகர் நடிகைகளில் முக்கியமானவர் நயன்தாரா. தனக்கு பிடித்தமான இயக்குனர் என்றால் கதைகூட கேட்காமல் நடிப்பார். அதுமட்டுமில்லாமல் இதுவரை நயன்தாராவால் சிரமப்பட்டேன் என எந்த ஒரு இயக்குனரும் கூறியதே இல்லை.

அந்த அளவுக்கு தொழிலில் சின்சியராக இருப்பவர். சமீபகாலமாக நயன்தாரா கமர்ஷியல் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் உருவாகி மிகப்பெரிய நிதிச் சிக்கலில் மாட்டி ஒருவழியாக வெளியாகி தோல்வியைத் தழுவிய திரைப்படம் தான் கொலையுதிர் காலம்.

nayanthara-kolaiyuthirkalam

nayanthara-kolaiyuthirkalam

இந்த படத்தை தல அஜித்தின் பில்லா-2 படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி என்பவர் இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி தோல்வியை தழுவிய திரைப்படம். இயக்குனரின் மீது பெரிய நம்பிக்கை வைத்ததால் அந்த படத்தின் கதை கூட கேட்காமல் நடித்தாராம் நயன்தாரா.

ஆனால் நம்பி நடித்ததற்கு இப்படி ஒரு மோசமான படத்தை கொடுப்பாரா எனவும், அந்தப் படத்தில் நடித்ததை நினைத்து இப்போதும் வெட்கப்படுகிறேன் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார் நயன்தாரா. இனி கதைதான் பஸ்ட், இயக்குனர் நெக்ஸ்ட் என்ற பாலிசியை கடைபிடித்து வருகிறாராம்.

Continue Reading
To Top