Tamil Cinema News | சினிமா செய்திகள்
விரைவில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் சொல்ல இருக்கும் குட் நியூஸ் தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுக்காக ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் சமகால நடிகைகளிலேயே அதிக லைக்ஸை குவித்தவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். இவரின் வாழ்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள், காதல் தோல்விகள் என பலவற்றை அசால்ட்டாக கடந்து வந்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் அவ்வளவு தான் என பலரும் நினைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். அங்கு எகிறியது அவரின் கேரியர் கிராப். அவரை போல ஒரு நாயகி இத்தனை பிரச்சனைகளை சந்தித்து இருந்தால் என்றோ சினிமாவிற்கு பெரிய வணக்கம் வைத்து சென்று இருப்பார். ஆனால், அத்தனையும் தாங்கி கொண்டு இருந்ததால் தான் இன்று நயன்தாரா என்னும் நடிகைக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித் என முன்னணி நாயகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் படங்களில் நயன் படம் என்றால் ஹிட் அடிக்கும் என எழுதப்படாத விதியே கோலிவுட்டில் உருவாகி விட்டது.
நடிகர் சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு அவருக்கு உறுதுணையாக கிடைத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்புகளில் அவரும், விக்னேஷ் சிவனும் எடுத்து கொண்ட செல்பி மூலம் அவர்கள் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். இருந்து இருவரும் எதுவுமே வாய் திறக்கவில்லை. போக போக எதும் நல்ல நாள் என்றால் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் கியூட் கிளிக்குகள் வந்து விழும். வைரல் பட்டியலில் அதிகமுறை இடம் பெற்று இருப்பது இவர்களின் ரொமான்ஸ் ததும்ப இருந்த செல்பிக்கள் தான். இந்த நொடி வரை இருவரும் காதல் குறித்த வதந்திக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேடையில் கூட சிரித்துக் கொண்டே நழுவி விடுவர்.
ஏறத்தாழ இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ஆனால், அதற்குள் தன் காதலரை பெரிய இடத்தில் உட்கார வைக்கும் வேளைகளில் நயன் இறங்கி இருக்கிறார். அதன்படி அவர் அதர்வா முரளியை வைத்து இயக்க இருக்கும் இதயம் முரளி என்ற படத்தை நயன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே வேளையில், விக்னேஷ் சிவனே நாயகனாக ஒரு படத்தில் நடிக்க அதையும் நயன் தயாரிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. இரண்டில் ஒரு அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கிறது இவர்களின் நெருங்கிய வட்டாரம்.
