Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமெரிக்காவில் மையம் கொண்டு இருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
கோலிவுட்டின் இளம் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அமெரிக்காவில் எடுத்த செல்பி தற்போது இணையத்தில் வைரலாகி பரவி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. காதல் தோல்விகள் என பல சர்ச்சையை அசால்ட்டாக கடந்து வந்து இருக்கிறார். அவரை போல ஒரு நாயகி இத்தனை பிரச்சனைகளை சந்தித்து இருந்தால் என்றோ சினிமாவிற்கு பெரிய வணக்கம் வைத்து சென்று இருப்பார். ஆனால், அத்தனையும் தாங்கி கொண்டு இருந்ததால் தான் இன்று நயன்தாரா என்னும் நடிகைக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித் என முன்னணி நாயகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் படங்களில் நயன் படம் என்றால் ஹிட் அடிக்கும் என எழுதப்படாத விதியே கோலிவுட்டில் உருவாகி விட்டது.
இதை தொடர்ந்து, இரண்டு காதல் தோல்விக்கு பிறகும் அவருக்கு ஒரு காதல் துணை கிடைத்தது. நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்புகளில் அவரும், விக்னேஷ் சிவனும் எடுத்து கொண்ட செல்பியை வெளியிட்டனர். அது தான் இவர்களின் காதலுக்கு முதல் தீயை ரசிகர்களிடம் கிள்ளிப் போட்டது. தொடர்ந்து, பிறந்தநாளுக்கு இவரும் போடும் செல்பிக்களுக்காக ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினர். தொடர்ந்து, இருவரும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். சமீபத்தில், இருவரும் அமெரிக்காவில் எடுத்த செல்பிக்களில் ததும்பிய ரொமான்ஸே இந்த ஜோடியின் காதலை உறுதிப்படுத்தியது. இந்த நொடி வரை இருவரும் காதல் குறித்த வதந்திக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இருவரும் மீண்டும் அமெரிக்காவிற்கு பறந்து உள்ளனர். பிரபல கோச்செல்லா இசை மற்றும் கலை திருவிழா இன்டியோ பகுதியில் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் வெளியிட்டு விட்டார். பிறகென்ன, ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்க தொடங்கி விட்டனர்.
