Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷாருக்கான் படத்துக்கு கிளம்பிய நயன்தாரா.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம்

நெற்றிக்கண் பட ரிலீசுக்குப் பிறகு நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்றில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அந்த படத்தை விஜய்க்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ இயக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் பூனேவில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதில் ப்ரியாமணி, யோகி பாபு என தமிழுக்கு தெரிந்த முகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் மாஸ் படமாக உருவாக உள்ளது. நயன்தாரா சமீபத்தில் ஷாருக்கான் படப்பிடிப்புக்கு சென்ற விமான நிலைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படம் 2022ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு தயாராகி வருகிறது. ஆனால் நம்ம அட்லீயைப் பற்றித்தான் தெரியுமே. சொன்ன படத்தை சொன்ன தேதியில் எடுத்துக் கொடுத்துவிட்டால் ஆச்சரியம்தான்.

தமிழில் தயாரிப்பாளர்களை படாதபாடு படுத்திய அட்லீ ஹிந்தியிலாவது சொல் பேச்சைக் கேட்டு சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு சிரமம் இல்லாமல் நடந்து கொள்வாரா? என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி மட்டும் நடந்து கொண்டால் தமிழ் தயாரிப்பாளர்களும் அட்லீ மீது கறார் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

nayanthara-latest-photo

nayanthara-latest-photo

Continue Reading
To Top