மாஸ், பக்கா மாஸ்.. லேடி சூப்பர் ஸ்டாருக்கு கூடும் மாஸ்!

20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் முன்னணி நடிகை நயன்தாரா மட்டுமே. வயது முதிர்ச்சி காரணமாக மார்க்கெட்டை இழந்து பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி உள்ளனர். ஆனால் 37 வயதான நிலையிலும் தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.

தனது அபாரமான நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள நயன்தாரா, சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும், நாயகனுக்கு சமமான கதாபாத்திரங்களிலும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவருடைய வயதைப் போல் இவரின் சம்பளமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஊரடங்கு காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் பல நடிகைகள் திண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் கூட நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai

தமிழில் மட்டுமல்லாமல் தென் இந்திய மொழிகள் பலவற்றில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வருகின்றதாம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும், அட்வான்ஸ் தொகை மட்டுமே 20 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

எது எப்படியோ வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையவே இல்லை என கமெண்ட் செய்யும் ரசிகர்கள் இருக்கும் வரை நயன்தாராவிற்கு மாஸ், மவுசு எல்லாம் உண்டு..

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்