புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

கழுத்தில் சுருக்கு விழுந்து வயதான தோற்றத்தில் நயன்தாரா.. ஷாக்கிங் ஆக வெளியான விளம்பர புகைப்படம்

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லயன். இப்படத்திற்கு பிறகு தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது பிசியாக நடித்து வரும் நயன்தாரா சமீபகாலமாக தொழில் துறையிலும் கவனம் செலுத்தி அதிலும் வெற்றிக்கான திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் துபாயில் உள்ள எண்ணெய் நிறுவனத்திடம் நயன்தாரா பேசியதாகவும் கூடிய விரைவில் இந்தியாவில் ஒரு எண்ணெய் நிறுவனத்தை உருவாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதாவது சினிமாவில் ஒரு காலம் வரைமட்டும் தான் நிலைத்து நிற்க முடியும் அதன் பிறகு வருங்கால கதாநாயகிகள் அந்த இடத்தைப் பிடித்து விடுவார்கள்.

அதனால்தான் நயன்தாரா தற்போது அனைத்து துறைகளிலும் கால்பதித்து வெற்றிக்கான திட்டமிட்டுள்ளார். ஒரு பக்கம் தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா. தற்போது விளம்பர நிகழ்ச்சியில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara
nayanthara

சமீபத்தில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் அது என்ன விளம்பரம் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். காரணம் நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா விளம்பரத்தில் நடித்துள்ளதை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் விளம்பர சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா மிகவும் ஒல்லியாக உள்ளார். சில நாட்களாக நயன்தாரா படங்களில் குண்டாக காணப்பட்ட நிலையில் மீண்டும் நயன்தாராஒல்லியாக உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா கழுத்தில் சுருக்கு விழுந்ததாக கூறி வருகின்றனர்.

Trending News