இதுநாள் வரை தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா ஒரே ஹீரோவுடன் இன்னொருமுறை இணைந்து நடித்தால் அதுவே ஆச்சர்யமான விஷயம் தான்.

ஆனால் சாதனையிலும் சாதனையாக மலையாள மெகாஸ்டார் மம்முட்டியுடன் நான்கு படங்களில் இணைந்து நடித்துவிட்ட நயன்தாரா, அடுத்ததாக ஐந்தாவது படத்திலும் இணைந்து நடிக்கவுள்ளார்.

2005ஆம் வருடமே “தஸ்கர வீரன்” மற்றும் “ராப்பகல்” ஆகிய படங்களில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார்

கடந்த வருடம் மம்முட்டியுடன் மூன்றாவது முறையாக “பாஸ்கர் தி ராஸ்கல்” அதை தொடர்ந்து “புதிய நியமம்” படம் நடித்தார்.

தற்போது மீண்டும் ஐந்தாவது முறையாக மம்முட்டியுடன் நயனதாரா நடிக்கவுள்ளார்.”மை டாட் டேவிட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் மதம் படபிடிப்பு தொடங்கவுள்ளது.