தான் உண்டு தனது சம்பாத்தியம், தனது வாழ்க்கை உண்டு என்று வாழும் சினிமா ஹீரோக்களுக்கு மத்தியில் தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மீது அன்பும், பரிவும் காட்டும் ஒரு சில கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினி, அஜீத், சத்யராஜ் என சில கலைஞர்கள் உண்டு. ஹீரோயின்களில் உடன்  பணியாற்றும் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உதவியாளர்கள் மீது அதிக பாசம் கொண்டவர் நடிகை நயன்தாரா.

தென் இந்திய சினிமாவில் இந்த வயதிலும் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு முக்கிய காரணமே அவரின் தொழில் பக்தியும்,   உடன் இருப்பவர்களை அதிகமாக நேசிப்பதும் தான்  காரணம் என்கிறார்கள்.

ஒரு படம் ஷூட்டிங் நடந்து முடியும் கடைசிநாள் அன்று யாருக்கும் தெரியாமல் விலை உயர்ந்த பரிசுகள் அவரது காரில் காத்திருக்கும். மாலை நயனின் ஷாட் முடியும் போது அவரது உதவியாளர் பரிசுப் பொருட்கள் மொத்தத்தையும் எடுத்து வருவார்.

அனைவரையும் அன்போடு அழைப்பார் நயன். உதவி இயக்குனர்கள்,உதவி கேமராமேன்கள், மேக்கப் உதவியாளர்கள், ஆடைவடிவமைக்கும் உதவியாளர்கள் லைட்மேன்கள் என அனைவருக்கும் பரிசுகள் கொடுப்பார்.

அன்று அறுசுவை உணவுகள் நயன்தாரா செலவில் தயாராக காத்திருக்கும். அனைவரோடும் அமர்ந்து சாப்பிடுவார். தொழிலாளர்கள் கண்கலங்கிப் போவார்கள்.

பின் அனைவரிடமும் சொல்லி விட்டு பிரியாவிடை பெறுவார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நயன் நடிக்கும் படங்கள் என்றாலே தொழில் நுட்ப கலைஞர்கள்  மகிழ்ச்சியுடன் பணியாற்றுவார்கள்.

அவருக்கு நம்பிக்கையுடன் பணியாற்றும் அவரது நேரடி உதவியாளர்கள், மேனேஜர்கள் போன்றவர்களின் குடும்பத்திற்கு இடர் வரும் போதெல்லாம் பண உதவி செய்வார். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வீடு,கார் என்று பெரிய அளவில் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி விடுவார் நயன்.

தொழிலாளர் தினத்தன்று நிச்சயம் அந்த தொழிலாளர்கள் நயனை நிச்சயம் வாழ்த்துவார்கள்!