fbpx
Connect with us

நயன்தாரா ஹீரோயின் ஆகவில்லை என்றால் இந்த வேலைக்கு தான் போயிருப்பாராம்! போயிருந்தா நல்லாருந்திருக்கும்!

vignesh-shivan-nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாரா ஹீரோயின் ஆகவில்லை என்றால் இந்த வேலைக்கு தான் போயிருப்பாராம்! போயிருந்தா நல்லாருந்திருக்கும்!

தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் என்னதான் பற்பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் வீருகொண்டு எழுந்து தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர்களுக்கு இணையான அளவு ரசிகர் கூட்டத்தை  கொண்டிருக்கும் ஒரே ஒரு நடிகை என்றால் அது நயன்தாரா தான்.

தற்போது இவரது நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவை பற்றிய சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதும், இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததே.

இவ்வாறிருக்க நயன்தாரா முதலில் நடிகையாக விரும்பவில்லை. அவருடைய லட்சியம் சார்ட்டட் அக்கவுண்டண்ட்டாக பணியாற்றுவது தான் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் பிறகு மாடலிங்கில் கவனம் செலுத்தியதால், படங்களில் நடிக்க ஆரம்பித்ததால்  தனது வாழ்க்கை பயணத்தையே மாற்றி அமைத்து விட்டாராம் நயன். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

nayanthara-cinemapettai

nayanthara-cinemapettai

Continue Reading
To Top