மாணவர்கள் ஜல்லிக்கட்டு போர் நடந்த போது பீட்டா விஷால் நடிகர் சங்கத்தில் ஒரு உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

பெரிய சாமியானா பந்தல் நாற்காலிகள் ஏர் கூலர்கள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூலிங்கிளாஸ் போராட்டம் என்று மீடியாக்கள் வர்ணிக்கும் அந்த போராட்டத்தில் கூட்டமே இல்லாமல் நடிகர்கள் சிலர் வந்து போயினர்.

பலர் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். கலந்து கொள்ளாத நடிகர் நடிகைகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. யாரும் இன்னும் விளக்கம் சொல்லவே இல்லை.

மாணவர்கள் போராட்டத்திற்கு நயன்தாரா நேரில் சென்று வாழ்த்தி வந்தார். அப்போது இதுதான் உணர்வு பூர்வமான போராட்டம். அங்கு நடப்பது கூலிங்கிளாஸ் போராட்டம். அங்கு நான் ஏன் போகணும்? அவங்க நல்லா சாப்பிட்டு விட்டு வந்து உட்காருவாங்க. மதியம் வேலை இருக்கிறது என்று கூறி ஹோட்டல் போய் சாப்பிடுவாங்க என்று கூற மாணவர்கள் சேச்சி.. சேச்சி என்று ஆராவாரம் எழுப்பினரார்கள்.

இந்த விஷயம் வார இதழ் ஒன்றில் வெளியாக பீட்டா விஷால் கடும் ஆத்திரம் அடைந்தார் என்கிறது கோடம்பாக்கம் குருவி.

நயன் ஒரு கேள்வி கேட்டாலும் நச்சென்று கேட்டுள்ளார்.