நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் பற்றிய விஷயங்கள் என்றாலே ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு அதில் நடித்த நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் காதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும் சமீபத்தில் வந்த இவர்களை பற்றிய தகவல் அதை உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சியை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இவை நயன்தாரா காதலை சொல்வது போன்ற காட்சி.nayanthara

இதற்கு விக்னேஷ் சிவன் பயங்கரமாக பீல் செய்து தன்னுடைய உணர்வுகளை ஸ்மைலியாக பதிவிட்டு ரீ ட்வீட் செய்ததை பாருங்கள்.

“நயன்தாரா போன்று அழகான, வலிமையான பெண்ணை பார்த்ததில்லை” : புகழுந்த விக்னேஷ் சிவன்!

சமூகவளைதலங்களில்  விக்னேஷ் சிவன்  என் வாழ்நாளில் நயன்தாரா போன்று அழகான, வலிமையான பெண்ணை பார்த்தில்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன்  புகழந்து தள்ளியிருக்கிறார்.

அழகான போராளியே… வலி மற்றும் தோல்விகளுக்கு நடுவே… எல்லாவற்றையும் கடந்து இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு வாழ்த்துகள்! மெக்சிகோவில் ஏதாவது நடந்தால் கூட மக்கள் உன்னை விமர்சனம் செய்கின்றனர்.Nayanthara_Runner

அதனையும் புன்னகையுடன் கடந்து செல்கிறாய்! வலிமையுடன், நம்பிக்கையுடன், பாஸிடிவ் சிந்தனையுடன் இருக்கிறாய். நயன்தாராவாக இருப்பது அத்தனை எளிதானது அல்ல. ஆனால் உன் அழகைப்போலவே சாத்தியப்படுத்தியுள்ளாய். என்று புகழ்ந்து தள்ளினார்

நயன்தாரா தற்போதெல்லாம் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகின்றார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

அவரின் பிறந்தநாளுக்கு கூட அமெரிக்காவில் இருவரும் கொண்டாடினர், இந்நிலையில் நயன்தாரா கையில் தற்போது புதிய டாட்டூ ஒன்று உள்ளது.

இதற்கு முன் அதில் தன் முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயர் இருந்தது, தற்போது அதை அப்படியே Positivity என்று மாற்றிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

காதல் தோல்வியை கூட Positivity -யாக மாற்றிய நயன்தாரா என ரசிகர்கள் புகழ்ந்தும் வருகின்றனர்.விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.