கேரள புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த நயன்தாரா.. செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள்

கோலிவுட்டில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் சினிமா துறையை கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகை தான் நயன்தாரா. இன்னமும் இவருக்கு நிகரான ஒரு ஹீரோயின் கோலிவுட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாமல் நடிகருக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா மட்டும் தான். இவரது நடிப்பில் தற்போது வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது வழக்கமாகிவிட்டது.

அதேபோல் நடிகை நயன்தாரா தனது காதல் வாழ்க்கையையும் கெரியரையும் செம்ம மாஸாக பேலன்ஸ் செய்து வருகிறார். இதெல்லாம் ஒரு புறம் இருக்க தற்போது  நயன்தாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, தலைவி ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நயன்தாரா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதேபோல் அவர் பதிவிடும் ஓரிரண்டு புகைப்படங்களையும் அவரது ரசிகர்கள் தாறுமாறாக வைரல் ஆக்குவது வழக்கம்.

அந்த வகையில் நயன்தாரா தற்போது வெள்ளை நிற சேலையில் கேரள மணப்பெண் போன்று அலங்கரித்து போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களிடையே ‘ரகசிய திருமணமா இருக்குமா?’ என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement Amazon Prime Banner