கோலிவுட்டில் வெற்றி, தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
மேலும் ஒரு முன்னணி நடிகருக்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளனரோ அதே அளவிற்கு நயன்தாராவிற்கும் ரசிகர்கள் உண்டு. இதனால் இவரது நடிப்பில் தயாராகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தற்போது நயன்தாரா ‘அண்ணாத்த’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் நயன்தாரா அவருடைய முடிக்கு செலவழிக்கும் பண விபரம் பற்றிய தகவல் லீக்காகி, பலரை ஷாக் ஆக்கியுள்ளது.
அதாவது சமீபத்தில் சென்னையில் ‘வெட்டி பசங்க’ படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றதாம். அப்போது பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் என்பவர், நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்ட் போன்றோர்களை விமானத்தின் மூலம் பாம்பேவிலிருந்து வர வைப்பதாக தெரிவித்துள்ளார். அதுவும் ஒருத்தர் ரெண்டு பேர் இல்லையாம் ஆறு உதவியாளர்களாம்.

இதனைத் தொடர்ந்து பேசிய ராஜன், தயாரிப்பாளர்கள்தான் இந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் மேக்கப் உதவியாளர்களுக்கு சம்பளம் தரவேண்டும் என்றும், இங்கு மேக்கப் கலைஞர்கள் இல்லாத மாதிரி இந்த நடிகைகள் நடந்து கொள்வது வியப்பாக உள்ளது என்றும், இது போன்ற செலவுகளை குறைத்துக்கொண்டால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புண்டு என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், நயன்தாராவின் மேக்கப் செலவு ஒரு நாளைக்கு ஒரு லட்சமாம். ஒருவேளை நயன் முடி தங்கத்துல இருக்குமோ என்னமோ!