உலகம் முழுக்க பல எண்ணிக்கையிலான திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை பாகுபலி உண்மையாக்கிவிட்டது.

இதை தொடர்ந்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ராமாயணம் காவியத்தை ரூ 500 கோடியில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

அதிகம் படித்தவை:  ராய் லக்ஷ்மி-சினிமாவிற்கு வரமால் இருந்திருந்தால் நான் இதுவாக தான் ஆகியிருப்பேன்

ராமர், சீதை கதாபாத்திரங்களுக்கு மிக முக்கிய பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் சீதை கேரக்டருக்கு அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

அதிகம் படித்தவை:  என்னமா பிந்து உன் முடிக்கு என்ன ஆச்சு.! பிந்து மாதவியின் புகைப்படத்தைப் பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே நயன்தாரா ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.