கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் அடுத்த படத்திற்கு  ஜோடியாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தவகல்கள் கசிந்துள்ளன.

பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் இவர் இறைவி படத்தின் தோல்வியால் பெரும் மனவுளைச்சலில் இருந்தார்.

அதிகம் படித்தவை:  வைரலாகுது அக்ஷரா கமலின் ஜிம் போட்டோ. மகளுக்கு அறிவுரை கூறிய கமல் !

இப்படம் தயாரிப்பில் இருந்த போது கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் படத்தை இயக்கம் வாய்ப்பு வந்தது  படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனமே தயாரிப்பதாக இந்தநிலையில், ‘இறைவி’ தோல்வியானதால் தனுஷ் கார்த்திக் சுப்புராஜை வைத்து படம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டார்.

இதனையடுத்தது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிரபு தேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் பிரபு தேவாவிற்கு ஜோடியாக கன்னட நடிகை சம்யுக்தா ஹைக்டே நடிக்க உள்ளதாக இருந்தது. அனால் சில பிரச்சனை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகியதால் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தவகல்கள் கசிந்துள்ளன.