தொல்லை கொடுக்கும் நயன்தாரா.. புகழுக்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடாதீர்கள்

தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சியை கண்டு பொறாமை படாத நடிகைகளே இருக்க முடியாது. அதிலும் தமிழ் சினிமாவில் இன்று வரை இவருடைய இடத்தை எந்த ஹீரோயினும் பிடிக்கவில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு இவர் பேரும், புகழுடன் கொடிகட்டி பறந்து வருகிறார்.

சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கேரக்டர்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்கள் யாவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் தொடர்ந்து அதே மாதிரி கதைகளை தேர்ந்தெடுக்க நயன்தாரா முடிவு செய்திருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இளம் நடிகர்கள் முதல் சூப்பர் ஸ்டார் வரை பல ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதனால் தற்போது இவருடைய மார்க்கெட் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் இவர் தற்போது ஓவராக கெத்து காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நயன்தாராவை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். இந்த பட்டத்தை அவருக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எல்லா படங்களிலும் இவர் பெயரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றுதான் போடுகின்றனர்.

சமீபத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் உடன் நயன்தாரா இணைந்து நடித்திருந்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றுதான் போடப்பட்டது. அப்படி தன் பெயர் வருவதைத்தான் நயன்தாராவும் விரும்புகிறாராம்.

அது மட்டுமல்லாமல் எல்லா படத்திலும் அப்படித்தான் போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம். தற்போது இவர் சோலோ ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் O2, விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திலும் அப்படித்தான் தன் பெயரை போட வேண்டும் என்று நயன்தாரா படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்து வருகிறாராம்.

ஆனால் படக்குழு இன்றுவரை அவர் கூறியதற்கு சம்மதம் கூறாமல் இழுத்தடித்து வருகிறார்களாம். நயன்தாரா இப்படி அடுத்தடுத்து தொல்லை கொடுத்து வருவது படக்குழுவினரை எரிச்சலடைய வைத்துள்ளது. பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடாதீர்கள் என்று அவரைப் பற்றி இப்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -spot_img

Trending News