இத கவனிச்சீங்களா மாநாடு படத்தில் நயன்தாரா.. வெங்கட்பிரபுவின் சித்து விளையாட்டு

தமிழ் திரையுலகில் சில காலம் எந்த திரைப் படங்களிலும் நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது உடல் எடையை குறைத்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிம்பு ஒரு படம் நடிக்கிறார் என்றாலே அதில் பிரச்சினைக்கு பஞ்சம் இருக்காது. அதுபோல மாநாடு திரைப்படமும் பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த படம் ஆரம்பித்த நாள் முதலே பல கருத்துக்கள் வெளியாகி வந்தன. அதாவது படத்தின் பல இடங்களில் நயன்தாராவின் நினைவுகள் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மாநாடு திரைப்படத்தின் பிரஸ்மீட் நயன்தாராவின் பிறந்த நாளான 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சிம்பு ஒன்பதாம் நம்பர் சேரில் அமர்ந்தார். மேலும் மாநாடு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் சிம்பு மற்றும் கல்யாணி இருவரின் கார்ட்டூன் ஓவியம் இடம்பெறுகிறது. அதில் இருக்கும் ஹீரோயின் புகைப்படம் பார்ப்பதற்கு நயன்தாரா போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவிற்கு இருப்பது போல அந்த புகைப்படத்தில் மச்சம் இருக்கிறது. இது தவிர ஒரு காட்சியில் அறை எண் 414 என்று வரும் அதை சேர்த்து ஒன்பது என்று வருவது நயன்தாராவை குறிக்கிறது. படத்தின் ஒரு இடத்தில் மூக்குத்தி அம்மன் துணை என்று வருவது நயன்தாரா நடித்த திரைப்படத்தையும் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Maanadu
Maanadu

ஏற்கனவே படத்தின் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ஒன்பதாம் நம்பர் வரும் படியே இருந்தது இதையெல்லாம் வைத்து நடிகர் சிம்பு இன்னும் நயன்தாராவை மறக்க முடியாமல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் ஒரு புதிய கருத்தை பரப்பி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்