ஆமா நான் சுயநலவாதி தான்.. முழு அரசியல்வாதியாக மாறி விஜய்க்கு டஃப் கொடுக்கும் நயன்

nayanthara-vijay
nayanthara-vijay

Nayanthara-Vijay: லேடி சூப்பர் ஸ்டார் ஆக கெத்து காட்டி வரும் நயன்தாரா இப்போது அரசியல்வாதியையே மிஞ்சும் அளவுக்கு மாறிவிட்டார். அதிலும் இவருடைய சமீபகால நடவடிக்கைகள் அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கு டஃப் கொடுப்பது போல் இருக்கிறது.

தற்போது ஏகப்பட்ட பிசினஸ் செய்து வரும் நயன்தாரா சானிட்டரி நாப்கின் தொழிலையும் கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் எல்லோரும் இது உங்க சுயநலம் தானே என சொல்றாங்க. ஆமா இது சுயநலம் தான்.

ஆனா இதுக்கு பின்னாடி இருக்கிற பொதுநலம் தான் இதை நியாயப்படுத்துகிறது. இந்த சானிட்டரி நாப்கின் எல்லாரையும் சென்றடைந்துள்ளது. ஆனால் அதை நாங்கள் விளம்பரப்படுத்த முயற்சிக்கவில்லை. இனிமேலும் அது நடக்காது என அந்த விழாவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Also read: கேப்டன் வாரிசுக்கு நான் இருக்கேன்.. விஜய், சூர்யா செய்யாததை செய்யத் துணிந்த மாஸ்டர்

அதை பார்க்கும் போதே நிச்சயம் இது தொழில் சார்ந்த அரசியலாக தான் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் மேடையில் அவர் பேசிய விதமும் பக்கா ஸ்கிரிப்ட். எழுதி கொடுத்ததை திக்கி திணறி எப்படியோ பேசி முடித்து விட்டார். ஆனால் தமிழை அவர் தாறுமாறாக பேசியது அவ்வளவாக ரசிக்கப்படவில்லை.

சினிமாவில் பக்கம் பக்கமாக டயலாக் பேசும் நயன் ஒரு மேடையில் பேசுவதற்கு தடுமாறியது ஆச்சரியம் தான். ஆனாலும் அவர் கைதட்டலுக்காக நிறுத்தி நிதானமாக பேசியதை பார்க்கும் போது முழு நேர அரசியல்வாதி தோத்து விடுவார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு அவர் தன் கம்பெனி ப்ராடக்ட்டை விளம்பரப்படுத்தியதோடு மக்களின் ஆதரவையும் நாசுக்காக பெற முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இதை அவர் இலவசமாக கொடுத்திருந்தால் நிச்சயம் அவர் மீது ஒரு நன்மதிப்பு உருவாகி இருக்கும். அப்படி இல்லாமல் உள்நோக்கோடு பேசிய நயனின் இந்த மேடைப்பேச்சு முழு சுயநலமாகவே தெரிகிறது.

Also read: நெட்டிசன்களுக்கு சரியா தீனி போட்ட தளபதி.. வைரலாகும் புகைப்படம்

Advertisement Amazon Prime Banner