fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நாயகன் படத்தில் கமல் மகளாக நடித்த நடிகை, இப்ப எப்படி இருக்காங்க பார்த்தீங்களா.? வைரலாகும் புகைப்படம்!

karthika-nayagan-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாயகன் படத்தில் கமல் மகளாக நடித்த நடிகை, இப்ப எப்படி இருக்காங்க பார்த்தீங்களா.? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஹிட் படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் அதற்குப் பிறகு இருந்த இடம் தெரியாமல் காணப்போவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ‘நாயகன்’ படத்தில் கமலின் மகளாக நடித்து பெரும் பெயர் பெற்றவர்தான் நடிகை கார்த்திகா. இவர் கமலுக்கு மகளாக சிறப்பாக நடித்து, தமிழ் மக்கள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் கார்த்திகா மலையாளத்தில் 80களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது நாயகன் படம் என்றாலும், மலையாளத்தில் முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து தான் நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக கார்த்திகா நடித்தாராம்.

இந்த நிலையில் கார்த்திகாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது நடிப்பின் உச்சத்தில் இருந்த கார்த்திகா, திடீரென ஒரு மருத்துவரை திருமணம் செய்துவிட்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். இதனால் 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

karthika-nayagan-3

karthika-nayagan-3

சமீபத்தில்தான் இவருடைய மகன் விஷ்ணுவுக்கு திருமணம் ஆகி இருக்கிறது. மேலும் தற்போது கார்த்திகாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

karthika-nayagan-3

karthika-nayagan-3

Continue Reading
To Top