Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல் என்ன ஏமாத்திட்டாரு.. கண்ணீர் வடிக்கும் ரஜினி பட நடிகர்.. ஷாக்கான கோலிவுட்!
தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் பாலிவுட்டில் பல வருடங்களாக சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தாலும், ‘கேங்க்ஸ் ஆஃப் வசே பூர்’ என்னும் திரைப்படத்தின் மூலம் பெரும் புகழை பெற்றார்.
இவ்வாறிருக்க சமீபத்தில் நவாசுதீன் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுடன் அவர் இணைந்து பணியாற்றியதைப்பற்றியும், நடித்ததைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தி கோலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது நவாசுதின் ஒரு பேட்டியில், கமலஹாசன் நடித்த ‘ஹே ராம்’ திரைப்படத்தில் நவாசுதின் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாகவும், படத்தின் இறுதி வடிவத்தில் அவர் நடித்த காட்சிகள் அந்தப் படத்திலிருந்து நீளம் கருதி நீக்கப்பட்டதாகவும், இதனால் அவர் மிக மோசமாக அழுததாகவும் கூறியிருந்தார்.
மேலும் இதனால் அவருக்கு கோபம் இல்லை என்றும், கமலஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக இந்தப் பேட்டியின் இறுதியில் நவாசுதீன் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு கமலஹாசனின் ஹிந்தி வசன பயிற்சியாளராக, ‘ஆளவந்தான்’ படத்தின் இந்தி தயாரிப்பின் போது நவாசுதீன் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

rajinikanth-nawazuddin
