திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

எல்லாம் ஓகே தான்.. ஆனா.. வாய் திறந்து பேசிய silent mode -இல் இருந்த கார்த்திக்

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திருப்பிடத்தில் நடித்து வருகின்றார். இதுவே விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கின்றார். இதனைப்பற்றி அவர் கடந்த பிப்ரவரி மாதமே அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்பு வந்தவுடன் பலரும் விஜய் ஏன் நடிப்பில் இருந்து விளக்குகின்றார் என கேள்விகேட்டனர்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். பலர் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், சமீபத்தில், விஜய் “நான் பொழுதுபோக்கிற்காக அரசியலுக்கு வரவில்லை என்று க்ளியராக சொல்லி இருந்தார்.”

விஜய் பற்றி கமெண்ட் செய்த நவரச நாயகன்

நிலையில் நவரச நாயகன் கார்த்திக் தன் கருத்துக்களை கூறியிருக்கின்றார். “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தம்பி விஜய்யும் அரசியலுக்கு வரட்டும். அவர் திரைப்பயணத்தில் பீக்கில் இருக்கும்போது அரசியலுக்கு வருகின்றார். அது பெரிய விஷயம், ஆனால் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.”

“படங்களில் நடித்துக்கொண்டே அரசியலில் இருக்கலாம். அவர் சொல்ல வரும் கருத்துக்களை பெரிய திரையின் மூலம் கூறினால் நல்ல ரீச் கிடைக்கும். எனவே அவர் படங்களிலும் நடிக்கவே வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” என்றார் கார்த்திக்.

தற்போது கார்த்திக் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கார்த்திக் சொன்னதை போல தான் பெரும்பாலானோர் ஆசை படுகிறார்கள். மேலும் கார்த்திக்-க்கு உடல் நலம் சரி இல்லை என்றெல்லாம் தகவல் வந்தது. மேலும், பல நாட்களாக silent mode-இல் இருந்தவர் திடீரென்று பேசி இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News