பரட்டைத் தலையுடன் சிங்கர் ஆக மாறிய சூர்யா.. வைரலாகும் கௌதம் மேனனின் நவரசா பட புதிய லுக்

காக்க காக்க, வாரணம் ஆயிரம் என தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணிக்கு யார் கண்ணடி பட்டதோ தெரியவில்லை, திடீரென இருவரும் பிரிந்து விட்டனர்.

இடையில் சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்த் என்ற படத்தை எடுத்து வந்ததாகவும் அந்த படத்தின் போது சூர்யாவிடம் சரியாக கதையை கூறாமல் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கதையே இல்லாமல் நினைத்த நேரத்தில் படம் எடுத்துக் கொண்டிருந்தாராம் கௌதம் மேனன்.

அந்த கால கட்டங்களில் சூர்யாவின் வளர்ச்சி உச்சத்தில் இருந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனதால் அந்த படத்தை அப்படியே விட்டுட்டு சென்றார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.

சூர்யா விட்டுச்சென்ற துப்பறியும் ஆனந்த் திரைப்படம் பின்னர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற பெயரில் உருவாகி அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணையும் வாய்ப்பு கொடுத்தார் மணிரத்னம். நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக 9 இயக்குனர்கள் இயக்கும் படமொன்றை நவரசா என்ற பெயரில் தயாரித்து வந்தார்.

இதில் ஒரு பகுதியாக கௌதம் மேனன் மற்றும் சூர்யா நடிக்கும் படம் உருவாகி வந்தது. இந்நிலையில் நவரசா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகப் போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

suriya-new-look-in-navarasa
suriya-new-look-in-navarasa
- Advertisement -spot_img

Trending News